|
அமீரகத் தமிழ் மன்றம் அமீரகத்தில் முதன் முறையாகப் பெண்கள் மட்டுமே மேடையில்
பங்கேற்கும் சிறப்பு நிகழ்ச்சியைக் கொண்டாடவிருக்கிறது வரும் 23ஆம் தேதி துபாய்
பெண்கள் கல்லூரியில் அரங்கேறவிருக்கும் இந்தப் பெண்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள
வருமாறு அனைவரையும் அமீரகத் தமிழ் மன்றம் அன்புடன் அழைக்கிறது
விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகையும் பாடலாசிரியையுமான ரோஹினி கலந்து
கொள்ளவிருக்கும் இவ்விழாவில் அமீரகத்தில் இருந்து கொண்டு சமூகத்திற்குத்
தொண்டாற்றும் சிறந்த மகளிரை அடையாளம் கண்டு அவர்களுக்குச் `சிறந்த
தமிழ்ப்பெண்மணி-2010` விருது வழங்கும் நிகழ்ச்சியும் அரங்கேறவிருக்கிறது இதற்காக
அமீரகத்தில் சமூகத் தொண்டாற்றிக் கொண்டிருக்கும் நான்கு பெண்மணிகளை அமீரகத் தமிழ்
மன்றம் அடையாளம் கண்டிருக்கிறது வாக்களிப்பு மூலமாகவும், நடுவர் குழு மூலமாகவும்
தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த பெண்மணி விழாவின் போது சிறப்பிக்கப்படுவார்
விழாவில் இன்னொரு நிகழ்வாக ஆச்சி மசாலா வழங்கும் `சுவையரசி-2010` விருதும்
வழங்கப்படவிருக்கிறது. அதற்காகப் போட்டியிட விரும்புவோர் தங்கள் பெயர்களை atmuae@gmail.com என்ற
மின்னஞ்சலில் பதிவு செய்து கொள்ளலாம். இந்தப் போட்டியில் பதிவு செய்து கொண்டவர்கள்
அசைவம் அல்லது சைவ உணவை சமைத்து எடுத்து வர வேண்டும் ஆச்சி மசாலாவை உபயோகித்து
செய்து வரப்பட்ட பதார்த்தங்களாக அவை இருக்க வேண்டுமென்பது இன்னொரு முக்கியமான விதி
இந்த வலைப்பக்கத்தில் இடம்பெறும் மகளிரில் சிறந்தவர்களுக்கு வாய்ப்பளிக்க பதிவுலக
அன்பர்களுக்கும் வாய்ப்புகள் வழங்கப்பட இருக்கிறது தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களின்
சமுக சேவைகளை வாசித்து அவர்களில் சிறந்தவர்களுக்கு உங்கள்
வாக்குகளை வழங்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்
அமீரகத் தமிழ் மன்றம்
|