Ameeraga Tamiz Mandram
அமீரகத் தமிழ் மன்றம்
தமிழர்களிடம் கலப்பற்ற தமிழ் பேச ஊக்குவித்தல். அமீரகத்தில் கணினியில் தமிழ் குறித்த விழிப்புணர்வை உருவாக்குதல்.
 
    View Content in : தமிழ்| English
ATM Aandu viza malar  
முக்கிய இணைப்புக்கள்
நூலகம்
   
நிகழ்ச்சிகள்
சமீபத்திய நிகழ்வுகள்
   
அறிவிப்புகள்
   
தமிழ் உதவிப் பக்கம்
தமிழ் பக்கங்களை பார்ப்பது எப்படி?
தமிழில் தட்டச்சு செய்வது எப்படி?
   
திருக்குறள்
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு
 
 
Why ATM
 

2000ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 20ஆம் தேதி தமிழ் இணையத்தில் எழுதிக் கொண்டிருந்த அமீரக நண்பர்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் விதமாக பர்துபாயில் உள்ள வெல்கம் உணவகத்தில் ஒன்று கூடி அளவளாவியதன் அடிப்படையிலேயே அமீரகத் தமிழிணைய நண்பர்கள் அமைப்பு உருவானது.

ஜனவரி மாதம் கூடியபோது அமைப்பாக உருவாகவில்லை யெனினும் முறைப்படி அமைப்பு உருவானது பெப்ரவரி மாத இறுதியில்தான். அதாவது பெப்ரவரி 24ஆம் தேதி வியாழன் மாலை பர்துபாயில் இருந்த கிங் தர்பார் உணவகத்தில் நண்பர்கள் கூட்டம் அமைப்பாக உருவானது.

மார்ச் மாதத்தில் அமைப்பிற்கென வலைத்தளம் அமைக்கும் பணி நிறைவேற்றப்பட்டது.

ஏப்ரல் மாதத்தில் அமைப்பிற்கென தனியாக செய்தி இதழ் நடத்துவதென முடிவாகி தமிழ் புத்தாண்டு தினமான ஏபரல் 14ஆம் நாள் "கானல்" வலையேற்றப்பட்டது.

இவ்வாறாக வெறும் 10 பேர்களுடன் உருவான அமைப்பு உலகளவில் இயங்கி வந்த தமிழ் இணையம் மடலாடற் குழுவில் இயங்கி வந்த அமீரக நண்பர்கள் ஒன்றிணைந்து உருவாக்கி்ய அமீரகத் தமிழிணைய நண்பர்கள் அமைப்பு கடந்த ஏழு ஆண்டுகளாக அமீரகத்தில் கணினியில் தமிழ் வளர்க்கும் பணியில் ஈடுபட்டு வந்ததன் பின்னர் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமானதாலும் தமிழ் இணையம் மடலாடற்குழு இப்போது ப்ரவலாக உபயோகத்தில் இல்லையென்பதாலும் 2007ஆம் ஆண்டு இயக்குனர் சேரன் முன்னிலையில் நடந்த விழாவில் அமீரகத் தமிழ் மன்றம் என்ற புதிய பெயருடன் 300க்கும் அதிகமான உறுப்பினர்களோடு புதிய உற்சாகத்துடன் செயல்பட்டு வருகிறது

தமிழார்வமும், தன்னார்வமும் கொண்டவர்களை மட்டுமே கொண்டதாக மிகத்திறந்த விவாதங்களுடன் அங்கத்தினர்களின் கருத்துக்க்ளுக்கு முன்னுரிமை வழ்ங்கி ஜனநாயக முறையில் இயங்குவதாக இந்த அமைப்பு தொடர்ந்தும் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது